படிப்பு, ஹோம்வொர்க், ட்யூஷன் போன்ற வேலைகள் ஏதுமின்றி பிள்ளைகள் கோடை விடுமுறையை என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்த உங்கள் பிள்ளைகள் அடுத்த வாரம் பள்ளிக்குச் செல்ல இருக்கிறார்கள்.
இந்த நிலையில், புதிதாகப் பள்ளி செல்லும் குழந்தைகள்… வீட்டில் அவர்கள் கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தைச் சரியாக மேற்கொண்டிருந்தாலும் பள்ளிக்குச் செல்லும்போது கழிவறை பயிற்சி கொடுப்பது அவசியம்.
அதேபோல, `பாத்ரூம் போகணும்னா… தயங்காம பள்ளி உதவியாளர் அல்லது ஆசிரியர்கிட்ட சொல்லணும்’ என்ற மிக முக்கிய ஆலோசனையையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க மறக்கக் கூடாது.
பள்ளியில், அந்தச் சூழலை பார்வையிடவும், கற்பிக்கவிருக்கும் கல்வி பற்றி பெற்றோருக்கு விளக்கவும் நடத்தப்படும் `ஓரியன்டேஷன்’ நிகழ்ச்சியின்போது, குழந்தைகளின் பெற்றோர் கட்டாயம் பள்ளியின் கழிவறையைப் பார்க்க வேண்டும்.
அது குழந்தைக்கு வசதியாக இருக்கும் வகையில் இருக்கிறதா என்று பார்வையிட்டு, குழந்தைக்கும் அந்த இடத்தைக் காட்ட வேண்டும்.
முதன்முறையாகப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு, அங்குள்ள டாய்லெட்டை பயன்படுத்துவதற்கு தயக்கமாகவும், பயமாகவும் இருக்கும்.
அதனால், ‘இங்கே தான் நீ பாத்ரூம் போக வரணும்’ என்பதை பெற்றோர் அறிவுறுத்தும்போது, `ஓகே… இங்குதான் நாம் வர வேண்டும்’ என்று குழந்தைக்கு மனதில் அந்த இடம் குறித்த ஒரு பாதுகாப்பு உணர்வு எழும். அதன் பின்னர், அடுத்தடுத்து இயல்பாக, பாத்ரூமை பயன்படுத்த ஆரம்பிக்கும்.
உங்கள் குழந்தை எடுத்தவுடனே சிரித்த முகத்துடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதுவரை வீட்டிலேயே இருந்துவிட்டு புது இடம் ஒன்றுக்குச் செல்லும்போது குழந்தைகள், அதனுடன் பொருந்திப் போவதற்கு கால அவகாசம் தேவைப்படும்.
பெரியவர்களாகிய நமக்கே புது இடம் மற்றும் புது வேலை ஆகியவற்றுடன் பொருந்திப்போக நேரம் எடுக்கும்போது… குழந்தைகளுக்கு சற்று கூடுதலாகவே நேரம் தேவைப்படும்.
எனவே, புதிதாகப் பள்ளியில் சேரும் உங்கள் குழந்தை அழாமல் செட்டில் ஆவதற்கு, மற்ற குழந்தைகளைவிட கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டால்… உடனே பதற்றமடையாதீர்கள். அவர்களுக்கான செட்டிலிங் டைமை முழுவதுமாகக் கொடுங்கள். முக்கியமாக அவர்களின் ஹெல்த் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த நல்ல ஐடியாவா இருக்கே: அப்டேட் குமாரு
எம். ஜி. ஆர் ரசிகராக கார்த்தி… படத்தின் டைட்டில் இதோ!
6 ஆவது கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 3 மணி வாக்குப் பதிவு நிலவரம்!
