சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார்.
76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதில் கலந்து கொள்ள முதலமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன், பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்துடன் கலந்து கொண்டார்.
திமுக தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டுள்ளனர்., மேலும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளார்.
கலை.ரா
பிடிஆர் கார் மீது செருப்புவீச்சு: முதல்வரின் கடிதத்துக்கு அண்ணாமலை பதில்!
