BSNL கொடுத்த ரூ.2,903 கோடி ஆர்டர்… கைகோர்த்த முக்கிய ஐடி நிறுவனம்!

Published On:

| By Minnambalam Desk

இந்தியாவில் பொதுத்துறை தொலைதொடர்பு சேவை நிறுவனமான BSNL-க்கு 4ஜி மொபைல் சேவை தொடர்பை அமைப்பதற்காக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 2,903 கோடி ரூபாய் முன்பணமாக BSNL வழங்கியுள்ளது. TCS Gets RS 2903 Crore Order From BSNL

இந்த ஒப்பந்தத்தின் கீழ், 18,685 தளங்களில் 4ஜி உபகரணங்களை நிறுவுவது, சோதனை செய்வது மற்றும் பராமரிப்பது போன்ற பணிகள் அடங்கும்.

ADVERTISEMENT

இது முழுமையான வெளிநாட்டு உதவியில்லாமல் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மையப்படுத்தியே உருவாக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4G விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி என்று TCS தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 4G அறிமுகமாகி ஜியோ, ஏர்டெல், வோடபோன் உட்பட தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் BSNL-க்கு 4ஜி சேவை அனுமதியை ஒன்றிய அரசு கொடுத்தது. TCS Gets RS 2903 Crore Order From BSNL

டாடா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு, அரசாங்கத்தின் C-DOT உடன் இணைந்து, 2023 மே மாதம் BSNL நிறுவனத்திடமிருந்து ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share