கிச்சன் கீர்த்தனா : தவா புலாவ்!

Published On:

| By Kavi

Tawa Pulao Recipe in Tamil

மும்பையின் பிரபலமான தெருக்கடை உணவு தவா புலாவ். ஒருமுறை இதை ருசித்தவர்கள் மீண்டும் மீண்டும் சுவைக்க நினைப்பார்கள். அப்படிப்பட்ட உணவை நீங்களும் தயாரித்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாறலாம். அதற்குப் பிறகு இந்த தவா புலாவை சாப்பிட தெருக்கடை பக்கம் போக தயங்குவார்கள்.

என்ன தேவை?

பச்சரிசி – ஒரு கப்
குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சைப்பட்டாணி – கால் கப் (அல்லது கால் கப் காய்ந்த பட்டாணியை ஊறவைத்து, பின்னர் வேக வைத்துக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா – 3 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

அரிசியை உதிர் உதிராக வேகவைத்து ஆறவிடவும். பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய் விட்டு சூடேற்றி சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் – பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி, குடமிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, பாவ் பாஜி தூள் ஆகியவற்றை சேர்க்கவும். இக்கலவையில் சிறிது தண்ணீர்விட்டு வதக்கி மிதமான தீயில் வேகவிடவும். மசாலா வெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த பட்டாணி மற்றும் வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

காய்ந்த மிளகாய் – பூண்டு விழுது செய்ய… ஐந்து காய்ந்த மிளகாய்களை கால் கப் வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். ஊறிய மிளகாய், ஏழு பூண்டு பற்கள் சேர்த்து, தண்ணீர்விடாமல் மைய அரைத்துப்பயன்படுத்தவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ஆலூ போஹா

கிச்சன் கீர்த்தனா : ஆலூ சாட்

கோட் வேர்ட் அக்செப்ட்… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி உத்தி… திமுகவில் அதிரடி மாற்றம்… தேதி குறித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share