ஜெயலலிதாவுக்கு பிடித்தமான கார்… மீண்டும் சந்தைக்கு வரும் டாடா சியாரா

Published On:

| By Kumaresan M

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய கார்களில் ஒன்று டாடா சியரா. 1991 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எஸ்.யூ.வி வாகனமாக சந்தையில் அறிமுகப்படுத்தியது. முதலில் 3 கதவுகளுடன் இந்த கார் சந்தைக்கு வந்தது. பல இந்தியர்களின் நம்பிக்கையை பெற்ற வாகனம் இது. Tata Sierra again in market

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த கார் பிடித்தமானது. ஜெயலலிதா தன்னிடத்தில் டாடா நிறுவனத்தை சேர்ந்த இரு சபாரி ஒரு சியாரா ரக காரை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசாரங்களின் போது, இந்த கார்களைத்தான் அவர் பயன்படுத்துவார்.

இந்த நிலையில், டாடா சியாரா மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது, 5 கதவுகளுடன் டாடா சியாரா சந்தைக்கு வரவுள்ளது. சமீபத்தில் , டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட டாடா சியார தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.

தற்போது, சந்தைக்கு வரும் இந்த காரின் அறிமுக விலை 11 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது . ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ செல்லும் வகையில் எலக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது.Tata Sierra again in market

சந்தையில் டாடா சியாரா கண்டிப்பாக சக்ஸஸ் ஆகுமென்று டாடா நிறுவனம் நம்புகிறது. நவீன வசதிகளுடன் புதிய தோற்றத்தில் சியாரா வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், உறுதியான தேதியை இன்னும் டாடா நிறுவனம் அறிவிக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share