கிச்சன் கீர்த்தனா : நிம்கி

Published On:

| By Minnambalam

மொறுமொறுப்பான சுவையான ஸ்நாக்ஸ் நிம்கி. எளிதாகச் செய்யக்கூடிய இதை மாலையில் டீ, ஸ்வீட் சாஸ் அல்லது கொத்தமல்லி சாஸுடன் பரிமாறலாம். அனைவரும் விரும்பி சுவைப்பார்கள். அடிக்கடிச் செய்ய சொல்வார்கள்.

என்ன தேவை?

ADVERTISEMENT

மைதா மாவு – 2 கப்
நெய் – கால் கப்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
நெய், மைதா – தலா ஒரு டேபிள்ஸ்பூன் (மேலே தடவ)
சாட் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

தலா ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு மற்றும் நெய்யை ஒரு சிறிய கிண்ணத்தில் குழைத்து வைக்கவும். வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில், மைதா மாவு, நெய், உப்பு, ஓமம் ஆகியவற்றை கலந்து தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும்.

பிசைந்த மாவை சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து, அதன் மேல் குழைத்து வைத்த மைதா மாவு – நெய்க் கலவையை பூசவும். பிறகு, பாய் போல உருட்டி துண்டுகள் போடவும்.

ADVERTISEMENT

துண்டுகளாக்கியதை மீண்டும் உருட்டி சிறு சிறு பூரிகளாக தேய்த்து சாட் மசாலாத்தூளை தூவி முக்கோண வடிவத்தில் மடித்து வைக்ககவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், முக்கோண நிம்கிகளை சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: நிம்கி உப்பாமல் இருக்க மேலே ஃபோர்க்கால் ஓரிரு இடங்களில் துளைகள் போட்டு பின்பு பொரிக்கவும்.

மதுர் தட்டை

தோசைக்காய்ச் சட்னி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share