டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளியே ஸ்டாலின் தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். TASMAC scam Stalin A1 annamalai accused
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை 1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறியது.
இந்த ஊழலை கண்டித்து அண்ணாமலை போராட்டம் அறிவித்தார். டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
எனினும் தடையை மீறி டாஸ்மாக் அலுவலகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிட வந்த அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன்,வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக அரசின் 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம் முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை.
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் ஸ்டாலின் தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம்” என்று சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அடுத்தமுறை அறிவிக்காமலேயே போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். TASMAC scam Stalin A1 annamalai accused