டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகளுக்கு அரசின் பதில் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ASMAC SCAM EPS walkout assembly
இன்று (மார்ச் 14) காலை தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் வாசிக்கத் தொடங்கியதுமே எடப்பாடி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ‘டாஸ்மாக் ஊழலுக்கு பதவியேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றும், ‘டாஸ்மாக் ஊழலுக்கு பதில் என்ன?’ என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“நேற்றைய தினம் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக கூறியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. முழுமையாக விசாரணை முடிவடையும்போது, சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என சந்தேகம் எழுகிறது. TASMAC SCAM EPS walkout assembly
அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி, ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்று சொல்லியிருக்கும் நிலையில், அதற்கு இந்த அரசு இன்னும் எந்த பதிலையும் சொல்லவில்லை. இதையும் சட்டமன்றத்தில் குறிப்பிட்டு, தார்மீக பொறுப்பேற்று இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.