விழுப்புரத்தில்‌ டாஸ்மாக்‌ விற்பனை அதிகரிப்பு!

Published On:

| By christopher

how to increase tasmac income

கள்ளச்சாராய விற்பனையை போலீசார் கட்டுப்படுத்திய நிலையில், விழுப்புரத்தில் தற்போது டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம்‌ குடித்து 22 பேர்‌ உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார்‌ மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால்‌ கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்‌ காரணமாக, விழுப்புரத்தில்‌ உள்ள 222 டாஸ்மாக்‌ கடைகளில்‌ வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.3.70 கோடி வர்த்தகம்‌ நடைபெறும்‌ நிலையில்‌, தற்போது கூடுதலாக ரூ.40 லட்சம்‌ வரை வருவாய்‌ கிடைத்துள்ளது.

மேலும் கோடைக்காலம் என்பதால் தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.130 கோடி வரையிலும் பீர் உள்ளிட்ட மது வகைகள் விற்பனையாகின்றன.

கிறிஸ்டோபர் ஜெமா

பெங்களூரை தோற்கடித்த குஜராத்: கிண்டல் செய்த சச்சின்

பப்புவா நியூ கினியாவில் திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share