கூடுதலாக ரூ.10 வசூலித்தால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

Published On:

| By christopher

tasmac employee will be suspended

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் தற்காலிக பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அ‌வ்வ‌ப்போது அது  தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கூடுதல் விற்பனையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் ஐஏஎஸ் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ”அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடை பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது: எடப்பாடி

ADVERTISEMENT

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share