“பார்களை மூடியதால் வருவாய் இழப்பு” – தமிழக அரசு

Published On:

| By Selvam

தமிழ்நாட்டில் 560 பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அருகில் தின்பண்டங்கள் விற்பனை செய்வது காலி மதுபான பாட்டில்கள் சேகரிப்பது தொடர்பாக பார் உரிமங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பாணை வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகம் முழுவதும் 560 பார்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் இன்று தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் 19-ஆம் தேதி மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

செல்வம்

ADVERTISEMENT

அண்ணாமலையை கண்டித்து அதிமுக போராட்டம்!

அண்ணாமலை பேட்டி : ஜெயக்குமாருக்கு பாஜக கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share