EDக்கு எதிரான டாஸ்மாக் வழக்கு : அனல் பறந்த வாதம்!

Published On:

| By Kavi

Tasmac argument in case

அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 9) டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. Tasmac argument in case

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மற்றும் அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது. 

இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த போது டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி ஆஜரானார். 

அவர், ” டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது வழக்கறிஞரை சந்திக்க கூட அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பெண் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை. 

டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க் மற்றும் அதிகாரிகளின் செல்போனில் இருந்த சில தகவல்களை பதிவிறக்கம் செய்தனர். 

இந்த வழக்கில் தங்களிடம் என்ன ஆவணங்கள் உள்ளன என்பதை அமலாக்கத்துறை விளக்க வேண்டும். 

சோதனையின் போது சில அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தூங்கவிடாமல் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டனர். 

அமலாக்க துறையினர் நீதியின் பாதுகாவலர்கள் இல்லை. அது ஒரு விசாரணை அமைப்புதான். அவர்கள் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு செயல்பட முடியாது. 

சோதனையின் போது ரகசியம் என்று கூறி எந்த விபரங்களையும் தர மறுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்த பின்னர் அறிக்கையை வெளியிட்டதன் நோக்கம் என்ன?. 

சோதனையையே விசாரணை போல அமலாக்கத் துறை மேற்கொண்டது என்று வாதங்களை முன்வைத்தார். 

டாஸ்மாக் தரப்பு வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். Tasmac argument in case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share