மாணவி பாலியல் வன்கொடுமை : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் – போலீசார் மீது தாக்குதல்!

Published On:

| By Kavi

 taramani Student sexual assault

தரமணியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே  கைகலப்பு ஏற்பட்டுள்ளது. taramani Student sexual assault

சென்னை தரமணியில் தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது தோழியுடன் , அதாவது தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் வெளியில் சென்றுள்ளார்.  கடந்த வெள்ளியன்று  மாலை  இருவரும் வெளியில் சென்ற நிலையில், அன்றைய தினம் மாலை தோழி மட்டும் விடுதிக்கு திரும்பியுள்ளார். அந்த மாணவி வரவில்லை. 

இதுகுறித்து கல்லூரி தரப்பில் கேட்ட போது, அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றுவிட்டார். ஆனால் எங்கே சென்றார்? எப்போது வருவார்? என  எனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார். 

இந்தசூழலில்  காணாமல் போன மாணவி சனிக்கிழமை காலை ரத்தக் காயங்களுடன் மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ளார்.

அவரிடம் கல்லூரி நிர்வாகம், விடுதி வார்டன் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ‘நான் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் வெளியில் சென்றேன்.  அப்போது போதை பொருள் கொடுத்து 7 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்று தெரிவித்திருக்கிறார். 

மாணவி இதுகுறித்து புகார் கொடுத்தும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கையோடு, அந்த மாணவிக்கு டீசி கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் இன்று (மார்ச் 25) மாணவிக்கு நீதி கேட்டு, எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்பினர் தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி  முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்த முயன்ற போலீசார் கல்லூரிக்குள் நுழைய முயன்ற மாணவர்களை தடுத்து நிறுத்தினர். 

அப்போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர் அமைப்பை சேர்ந்த சிலர் போலீசாரை தாக்கியுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

முன்னதாக அண்ணா பல்கலைக் கழக மாணவி, கல்லூரி வளாகத்துக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  taramani Student sexual assault

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share