கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் தமிழர்கள் தொழிலாளர்களாக பணியாற்றியதையும், அக்காலகட்டத்தில் தமிழக தொழிலாளர்கள் எதிர்கொண்ட இன்னல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதைதான் தங்கலான். இதனால் படம் அறிவிக்கப்பட்ட போதிருந்து அதன் மீதான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சீயான் 61 என 2021 டிசம்பர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தங்கலான் எனும் படத்தின் தலைப்பு 2022 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. ஸ்டுடியோ கீரின் – நீலம் புரடெக்ஷன்சன் இணைந்து சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 2024 ஜனவரி 26 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.
படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் போஸ்ட் புரொடக்ஷன், கிராபிக்ஸ் பணிகளை தொடர்வதில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும், இயக்குநர் ப.ரஞ்சித்திற்கும் மாறுபட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு ஒரு வழியாக தற்போது படத்தின் பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் 15 அன்று வெளியிட முடிவாகியுள்ளது.
ஆண்டின் முதல் அரையாண்டு முடிவடைய உள்ள நிலையில் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூல் திருப்திகரமாக இல்லை. எனவே அடுத்து வரும் அரையாண்டில் வெளிவர உள்ள வணிக முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தங்கலான் முக்கியமான படமாக திரையரங்குகளால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், படத்தில் நடித்துள்ள பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தங்கலான் படம் பற்றிய செய்தி, வெளியீடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
நூர்மி தடகள போட்டி : தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!