நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வருகிற செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி மாநில அளவிலான மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக அரசியலில் களமிறங்கப்போவதற்கான சமிக்ஞை கொடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தான் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதாக அறிவித்தார் விஜய். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று அவரது கட்சிக்குப் பெயரிட்டார். மேலும், தான் நடிக்கவிருக்கும் 69-வது படம்தான் தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அறிவித்தார்.
மாநாடு நடத்துவதற்காகத் திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இடம் பார்க்கப்பட்டது.
ஆனால், சரியான இடம் அமையவில்லை. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதைப் பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “ தமிழ்நாட்டில் ஒரு பெரிய கூட்டம் கூட இடமில்லை. கடந்த காலத்தில் எனது கட்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டபோது நான் அனுபவித்த இட நெருக்கடிகளைப் போல விஜய்யும் அனுபவிப்பார்” என்று கூறினார்.
இந்த நிலையில் தான் வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்கிறார்கள் கட்சி வட்டாரங்களில்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சுதந்திர தினம்: 26 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது!
பெருமூச்சு விட்ட பங்குச்சந்தை… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் இவை தான்!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? – இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!