தமிழகத்தில் இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Tamilnadu Weather Report March 8
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் 39.2° டிகிரி செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று (மார்ச் 8) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
09-03-2025 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10-03-2025 அன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11-03-2025 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது. Tamilnadu Weather Report March 8