ஊதியம், அகவிலைப்படி உயர்வு : போக்குவரத்து பணியாளர்கள் ஆா்ப்பாட்டம்!

Published On:

| By Kavi

போக்குவரத்து பணியாளர்களின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 18-ம் தேதி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையைத் தவிர்த்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், வாயிற் கூட்டம் நடத்தப்படும். ஜூன் 18- ந்தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் ஊழியர்களின் முக்கிய பிரச்சனைகளை போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுக்கு வலியுறுத்த உள்ளோம்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். 20,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர்களைத் தாக்குவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காவல்துறை, ஓட்டுநர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்போம். இதை அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 18-ம் தேதி ஆராப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி!

டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!

சென்னையில் சூறாவளி காற்றுடன் மழை! : மக்கள் மகிழ்ச்சி!

மத்திய அமைச்சரவையில் பணக்கார அமைச்சர் யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share