தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

Published On:

| By Selvam

கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் இன்றும் நாளையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதர மாவட்டங்களில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. வடதமிழக உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகாலை வேளையில்‌ லேசான பனிமூட்டத்துற்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

ADVERTISEMENT

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

ADVERTISEMENT

டி20 கிரிக்கெட்: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்த இலங்கை

கிச்சன் கீர்த்தனா : சோயா சங்க்ஸ் (Chunks) பக்கோடா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share