தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு குறித்து இன்று (அக்டோபர் 16) மாலை தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதில், புதிதாக 4,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 6,79,191 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 91,245 மாதிரிகள் உட்பட இதுவரை 87,66,038 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 5,245 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,27,703 ஆக அதிகரித்துள்ளது. இன்று 57 பேர் உட்பட இதுவரை 10,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,87,852 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் இன்று 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-பிரியா**