ADVERTISEMENT

இன்று 743: தமிழகத்தில் 13,000த்தை கடந்த பாதிப்பு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறை சார்பில் கடந்த 24 மணி நேரப் பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “11,441 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் 83 பேர் உட்படப் புதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

987 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882ஆக உள்ளது.

ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 17 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இன்று 557 பேர் உட்பட மொத்தம் 8,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயது விகிதங்கள் அடிப்படையில், 0-12 வயதுடையவர்கள் 803 பேரும், 13-60 வயதுடையவர்கள் 11381 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1007 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நேற்றுவரை 12,488ஆக இருந்த பாதிப்பு இன்று 13,191 ஆக அதிகரித்துள்ளது.

**-கவிபிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share