மக்களே உஷார் – அதிகரிக்கும் வெப்பநிலை : வானிலை அப்டேட்!

Published On:

| By Kavi

tamilnadu rain heat weather update

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. tamilnadu rain heat weather update

கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்த நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 8) வெளியிட்ட அறிவிப்பில்,

“நேற்று (07-04-2025), தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (08-04-2025) காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வடக்கு-வடமேற்கு திசையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும்.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று முதல் ஏப்ரல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு

08-04-2025 முதல் 10-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

08-04-2025 மற்றும் 09-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது. tamilnadu rain heat weather update

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share