ஊதியம்… பதவி உயர்வு : அரசு ஊழியர்களை தொடர்ந்து போராட்டத்தில் குதிக்கும் செவிலியர்கள்!

Published On:

| By Kavi

அரசு செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். tamilnadu nurses protest against government

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 30000 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  மக்களுக்கு சேவை வழங்குவதில் முதன்மை துறையாக விளக்கும் அரசு மருத்துவமனைகளில் பணி செய்யக்க்கூடிய செவிலியர்களுக்கு 30 வருடங்கள் பணி செய்தாலும் பதவி உயர்வு கிடையாது. பல செவிலியர்கள் பதவி உயர்வு இல்லாமலேயே தங்களது பணிகளை நிறைவு செய்திருக்கிறார்கள்.  tamilnadu nurses protest against government

ADVERTISEMENT

அதனால் அரசு செவிலியர்கள் சங்கத்தினர் ஐந்து கட்ட பதவி உயர்வு கேட்டு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு, மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணியில் இறக்கக்கூடிய செவிலியர்களுக்கு நிதி வழங்க வேண்டும், செவிலியர்களுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். 

ஆனால் எங்களது கோரிக்கைகளை அரசு செவிக்கொடுத்து கேட்பதில்லை என்று அரசு செவிலியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

ADVERTISEMENT

“ஒவ்வொருமுறையும் போராட்டத்தில் ஈடுபடும் போது நிதி பற்றாக்குறையாக இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் நிராகரிக்கின்றனர். இந்த மானிய கோரிக்கையின் போதும் நாங்கள் எதிர்பார்த்த அறிவிப்பு எதுவும் இல்லை.  அதனால் எங்களுடைய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகிறோம்” என்று அரசு செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் சக்திவேல் நம்மிடம் கூறினார். 

சக்திவேல்

எற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை பேரணி செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.  tamilnadu nurses protest against government

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share