தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டணம்!

Published On:

| By Balaji

புதிதாகத் திருத்தியமைக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டணங்களைத் தமிழக அரசு இன்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 565 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும், கார், பேருந்து, இலகுரக வாகனம், கனரக வாகனங்களுக்கான புதிய கட்டண விவரத்தைத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், “ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.10, சென்று வர ரூ.19, ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.33, மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.311 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கார் ஒரு முறை பயணிக்க ரூ.30, சென்று வர ரூ.60, ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.100, மாதம் 60 முறை பயணிக்க ரூ.1100, மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.2,390ம்,

இலகு ரக வாகனம் ஒரு முறை பயணிக்க, ரூ.49, சென்று வர ரூ.98, ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.136, மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.3050ம்,

பேருந்து ஒரு முறை பயணிக்க, ரூ.78, சென்று வர ரூ.154, ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.231, மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.5,050ம்,

சரக்கு வாகனம் ஒரு முறை பயணிக்க, ரூ.117, சென்று வர ரூ.220, ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.340, மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.7,500ம்,

பல அச்சு வாகனம் ஒரு முறை பயணிக்க, ரூ.234, சென்று வர ரூ.440, ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.676, மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.15,110ம், வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த கட்டண முறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share