தமிழ்நாடா தமிழ்நாய்டுவா?: மீண்டும் சர்ச்சை!

Published On:

| By Selvam

குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அரசு இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்துகிறது.

இதில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழ் நாய்டு என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக இந்த பிழை திருத்தப்பட்டது.

ADVERTISEMENT

தமிழ்நாடு பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை தேடி தரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tamilnadu name change tableau

இதுகுறித்து இன்று (ஜனவரி 28) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் www.mygov.in இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் Tamil Naidu என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.

tamilnadu name change tableau

தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

ADVERTISEMENT

தளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஏகே62 படத்திலிருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? – குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!

“ஜெய் ஸ்ரீ ராம் தான் ஒலிக்கும்”: பதான் பற்றி கங்கணா

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share