வாழ்க தமிழ்நாடு, பெரியார்… முருகப்பெருமான் மீது ஆணை… தமிழ்நாடு எம்.பிக்கள் பதவியேற்பு!

Published On:

| By Selvam

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்ட 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

இரண்டாவது நாளான இன்று (ஜூன் 25) தமிழக எம்.பி-க்கள் பதவியேற்றனர். அனைத்து எம்.பி-க்களும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். கிருஷ்ணகிரி எம்.பி கோபிநாத் மட்டும் தெலுங்கில் பதவியேற்றார். இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

உறுப்பினர்கள் பதவியேற்கும் போது அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவியேற்றனர். மேலும், வாழ்க தமிழ், வாழ்க திராவிடம், வாழ்க அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என்று கூறி பதவியேற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

திமுக மக்களவை குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு

மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகிய தளிக்கோட்டை ராஜூ பாலு எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன் என்று பதவியேற்றார்.

ADVERTISEMENT

திமுக மக்களவை கொறடாவும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா

மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ஆண்டிமுத்து ராசா எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன் என்று பதவியேற்றார்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி

மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகிய கனிமொழி கருணாநிதி எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன் என்று பதவியேற்றார்.

திமுக மக்களவை பொருளாளர் ஜெகத்ரட்சகன் 

வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயா என்று கூறி பதவியேற்றார்.

திமுக மக்களவை குழு துணைத்தலைவர் தயாநிதி மாறன்

வாழ்க தமிழ்… வாழ்க அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின். வேண்டாம் நீட்..Ban NEET என்ற முழக்கத்துடன் பதவியேற்றார்.

வாழ்க தமிழ், வளர்க முத்தமிழறிஞரின் புகழ், வாழ்க தலைவர் தளபதி, வாழ்க தமிழ்த்திருநாடு என்று கூறி பதவியேற்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.

பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகள் வாழ்க, திராவிடம் வாழ்க, தளபதி வாழ்க, தமிழ் வெல்லும் என்று பதவியேற்றார் கலாநிதி வீராசாமி.

ஸ்டாலின் போட்டோவை தூக்கி காண்பித்தபடி தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பதவியேற்றார்.

தாய் தந்தைக்கு வணக்கம், வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி, வருங்காலம் எங்கள் உதயநிதி என்று கூறி பதவியேற்றார் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்.

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு

மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.என்.நேரு – சாந்தா தம்பதியின் மகனான அருண் நேரு எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன். வாழ்க தமிழ், வாழ்க திராவிடம், வளர்க இந்தியா, வாழ்க தளபதியின் புகழ் என்று பதவியேற்றார்.

வாழ்க தமிழ், பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, ஸ்டாலின் வளர்க, எங்களின் அடுத்த தலைவர் அண்ணன் உதயநிதி, காவிரி நீரைத் திறந்து டெல்டா விவசாயிகளைக் காப்பாற்று என்று  பதவியேற்பின்போது  தஞ்சை எம்.பி முரசொலி முழங்கினார்.

வாழ்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வளர்க இளந்தலைவர் அண்ணன் உதயநிதி, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என்று கூறி பதவியேற்றார் ஈரோடு பிரகாஷ்.

பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க, வருங்கால தமிழகம் இளைஞரணி அமைப்பாளர் வாழ்க, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வாழ்க என்று கூறி கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் பதவியேற்றார்.

வாழ்க பெரியார், கலைஞர், தளபதி ஸ்டாலின், வாழ்க எங்கள் எதிர்காலம் சின்னவர், வாழ்க கனிமொழி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், வாழ்க தமிழ்நாடு, தமிழ் வெல்லும் என்று பதவியேற்றார் தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார்.

பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, வாழ்க தலைவர் தளபதி, வாழ்க இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று காஞ்சிபுரம் எம்.பி செல்வம் பதவியேற்றார்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு, கலைஞர் புகழ் ஓங்குக, ஸ்டாலின் வாழ்க, வருங்கால தமிழகம் உதயநிதி வாழ்க என்று பதவியேற்றுக் கொண்டார் சேலம் செல்வகணபதி.

வாழ்க தமிழ், வாழ்க கலைஞர் புகழ், வாழ்க எங்கள் தலைவர் ஸ்டாலின், எங்கள் எதிர்காலம் உதயநிதி, உழைத்த தொண்டர்களுக்கு நன்றி என்னை பெற்ற அன்னை குடும்பத்தாருக்கும் நன்றி கூறி கோவை கணபதிராஜ்குமார் பதவியேற்றார்.

பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, வாழ்க தலைவர் தளபதி, எதிர்காலம் சின்னவர் வாழ்க, தமிழ் வாழ்க…தமிழ்நாடு வளர்க என்று கூறி பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி பதவியேற்றார்.

வாழ்க கலைஞர், வாழ்க தமிழ், வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், வாழ்க உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு என்று கூறி ஆரணி தரணிவேந்தன் பதவியேற்றார்.

வாழ்க தமிழ், வாழ்க டாக்டர் கலைஞர், வாழ்க எங்களுடைய முதலமைச்சர் ஸ்டாலின், வாழ்க எங்களுடைய எதிர்காலம் உதயநிதி, வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு என்று கூறி திருவண்ணாமலை எம்.பி, சி.என்.அண்ணாதுரை பதவியேற்றார்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு, வாழ்க முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ், வாழ்க தலைவர் தளபதியின் புகழ் என்று தருமபுரி எம்.பி மணி பதவியேற்றுக்கொண்டார்.

வாழ்க இவ்வையகம், வாழ்க தமிழ், சிறுபான்மையினர், தலித், பழங்குடியினருக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள். வாழ்க தமிழ், ஜெய் பீம் என்று பதவியேற்றார் சசிகாந்த் செந்தில்.

மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகிய கார்த்தி சிதம்பரம் எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன் என்று பதவியேற்றார்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் மீது உளமாற உறுதிகூறுகிறேன், இந்தியாவின் நம்பிக்கை தலைவர் ராகுல் காந்தி வாழ்க, ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார் மயிலாடுதுறை எம்.பி சுதா.

தெலுங்கில் பதவியேற்றுக் கொண்டார் கிருஷ்ணகிரி எம்.பி கோபிநாத்.

பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க, என்று கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்தகுமார்  பதவியேற்றார்.

இந்திய அரசியலமைப்பு வாழ்க, ஜெய்ஹிந்த் என்று கூறி  பதவியேற்றார் மாணிக்கம் தாகூர் எம்.பி.

மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகிய விஷ்ணு பிரசாத் எனும் நான்  சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன் என்று பதவியேற்றார்.

வாழ்க தமிழ்நாடு, வளர்க இந்தியா, ஓங்குக ஒற்றுமை என்று பதவியேற்பின் போது முழங்கினார் கரூர் எம்.பி ஜோதிமணி.

மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகிய ராபர்ட் ஃபுரூஸ் எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடைமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன் என்று பதவியேற்றார்.

Jai Democracy…Jai Constitution என்ற முழக்கத்துடன் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார்.

வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வாழ்க எழுச்சித் தமிழர், வெல்க சமத்துவம், வெல்க சமூக நீதி என்று கூறி பதவியேற்றுக்கொண்டார்  விசிக எம்.பி ரவிக்குமார்.

தமிழ் வாழ்க, மார்க்சியம் வெல்க என்று முழக்கத்துடன் கையில் அரசியல் சாசனத்துடன் பதவியேற்றார்  சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழ் வாழ்க, மார்க்சியம் வெல்க, விவசாயிகள், தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக என்று சிபிஎம் எம்.பி சச்சிதானந்தம் பதவியேற்றார்.

தமிழ் வாழ்க, மார்க்சியம் வெல்க என்று சிபிஐ எம்.பி செல்வராஜ் பதவியேற்றார்.

வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழ்க பாரத மணித்திருநாடு என்று சிபிஐ எம்.பி சுப்பராயன் பதவியேற்றார்.

வாழ்க தமிழ், வாழ்க மதச்சார்பின்மை, வெல்க சமூகநீதி, வாழ்க ஜனநாயகம் எனக்கூறி உறுதிமொழி எடுத்தார் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி.

வாழ்க சமூக நீதி அரசியல், வாழ்க சமத்துவம், வாழ்க மதச்சார்பின்மை, பரவட்டும் மனிதநேயம் என்று பதவியேற்றார் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.

ஓங்குக கோவை செழியன் புகழ், அரூர் முத்துக்கவுண்டர் புகழ், அண்ணன் ஈஸ்வரன் புகழ் என்று கூறி நாமக்கல் மாதேஸ்வரன் பதவியேற்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஎன்பிஎஸ்சி, டெட், எம்.ஆர்.பி… இளைஞர்களுக்கு ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!

யானைகள் வழித் தடத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share