காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Published On:

| By Selvam

tamilnadu kanchipuram foxconn industry

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூலை 31) ஒப்பந்தம் கையெழுத்தானது.

தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று  சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஃபாக்ஸ்கான் குழுமத்தின் தலைவர் யங் லியு மற்றும் அவரது குழுவினரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சந்திப்பில் தமிழகத்தின் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1600 கோடியில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் தயாரிப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஆசியாவில் வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக தமிழகத்தை மாற்றும் எங்கள் லட்சியத்தில் புதிய மைல்கல்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் தமிழகத்தில் விரிவாக்க திட்டங்கள் மேற்கொண்டிருப்பது இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு சிறந்த தேர்வாக தமிழகம் உள்ளது என்பதற்கு சான்றாகும். இது தமிழகத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.

தமிழகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் மட்டுமே கிடைக்கும் என்பது கடந்த பல ஆண்டுகளாக இங்கு முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு தெரியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது உலக முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் தமிழகம் மின்னணு ஏற்றமதியை கணிசமாக அதிகரிக்க தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு!

“எதிர்க்கட்சி தலைவரை நாடாளுமன்றத்தில் பாஜக பேசவிடுவதில்லை” – திருச்சி சிவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share