ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பிக்கள், 4 கூடுதல் டிஜிபிக்கள் டிஜிபியாக பதவி உயர்வு அளித்து உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாகை எஸ்.பி ஜவகர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி ஜவஹர், வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்.பி சாய் பிரணீத், திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி ஷசாங் சாய், திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், திருப்பத்தூர் எஸ்.பி ஆல்பர்ட் ஜான், நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் டிஜிபிக்கள் ராஜிவ் குமார், சந்திப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியபெருமாள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

டான்ஜெட்கோ கண்காணிப்பு பிரிவு டிஜிபியாக வன்னியப்பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவலர் பயிற்சி அகாடமி டிஜிபியாக நியமனம்

கூடுதல் டிஜிபி அருண் ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன் மாநில குற்ற ஆவண எஸ்.பியாக நியமனம்

சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜியாக நியமனம்

சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக சரவணன் நியமனம்

மதுரை நகர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

செல்வம்

ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்?

திரும்ப பெறப்படும் ரூ.2000 நோட்டுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share