சென்னை மெட்ரோ 2: மத்திய அரசு 63,246 கோடி ஒதுக்கியதா? – தமிழக அரசு விளக்கம்!

Published On:

| By Selvam

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வந்த நிலையில், அதனை தமிழக அரசு இன்று (அக்டோபர் 4) மறுத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளானது மிகவும் தாமதமாக நடந்து வந்தது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நேற்று (அக்டோபர் 3) ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ADVERTISEMENT

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மத்திய அரசு தரப்பில் ரூ.7,425 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு, மத்திய அரசு தரப்பில் ரூ.7,425 கோடியும், தமிழக அரசு தரப்பில் ரூ.22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனத்தின் மூலம் மாநில அரசின் உத்தரவாத கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Womens T20 World Cup : 16 தோல்விகளுக்கு பின் வங்கதேசம் வெற்றி!

விஜய்யின் ’கோட்’ மோதிரம்! – பரிசளித்தது இவரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share