போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுவதில்லை என்று போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. Tamilnadu Govt allocates transport

ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், “கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் பணப்பலன் வழங்க ரூ.265.44 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு குறுகிய கால கடன் என்ற அடிப்படையில் ரூ.265.44 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக இயக்குனர்கள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.206 கோடியை தமிழக அரசு கடந்த மாதம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. Tamilnadu Govt allocates transport

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share