துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Published On:

| By Selvam

அரசு நியமித்த தேர்வு குழு பரிந்துரையின்படி துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னை பல்கலைக்கழகம், கோவை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தும் ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்யாமல் உள்ளார். இதனால் கல்வி பணிகள் முடங்கியுள்ளது. துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார். இதனால் அரசு நியமித்த பரிந்துரைபடி துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு இரண்டாவது வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் அரங்கில் முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை: சசிகலா தரப்பு வாதம்!

ADVERTISEMENT

அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share