தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு அறிவித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளராக உள்ள ஜெ.ராதாகிருஷ்ணன் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளராக உள்ள குமார் ஜெயந்த், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளராக உள்ள கே.கோபால், Tangedco தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக உள்ள ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலாளராக உள்ள நீரஜ் மிட்டல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக உள்ள மங்கத்ராம் ஷர்மா உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
ஜனவரி முதல் செயலி மூலம் வருகைப்பதிவு: பள்ளிக்கல்வி துறை
முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி: இந்தியாவின் இன்னொரு சானியா மிர்சா
