தமிழகம் : புதிதாக 5,795 பேருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

தமிழகத்தில் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமன், கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 10 பேர் உட்படத் தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 19) 5,795 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. இன்று 65 ஆயிரத்து 592 பேருக்கு உட்பட இதுவரை 37 லட்சத்து 78 ஆயிரத்து 249 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகபட்சமாக இன்று 6,384 பேர் உட்பட இதுவரை தமிழகத்தில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 116 பேர் உட்பட இதுவரை 6,123 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,186 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று திருவள்ளூரில் 393 பேருக்கும், செங்கல்பட்டில் 315 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

** கவிபிரியா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share