செஸ் ஒலிம்பியாட்: 8 தமிழக வீரர்கள் பங்கேற்பு!

Published On:

| By Prakash

சென்னையில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பங்கேற்கின்றனர்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். இதில், நம் இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்கியுள்ளது. இதில், இந்திய அணியில் இடம்பெற்று விளையாடவுள்ள தமிழக வீரர்களில் பிரக்ஞானந்தா, அவரது சகோதரி ர.வைசாலி, அதிபன் பாசுகரன், கிருஷ்ணன், எல்.நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, பி.சேதுராமன் ஆகிய 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share