நேரடி நியமனங்கள் மூலம் 7,783 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. tamilnadu anganwadi recruitment 2025
இதுதொடர்பாக சமூக நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “3,886 அங்கன்வாடி பணியாளர்கள் மாதந்தோறும் ரூ.7,700 தொகுப்பூதியத்திலும், சிறிய அளவிலான அங்கன்வாடிகளில் பணியாற்ற 305 பணியாளர்கள் ரூ.5,700 தொகுப்பூதியத்திலும், அங்கன்வாடி உதவியாளர்கள் 3,592 பேர் ரூ.4,100 தொகுப்பூதியத்திலும் எழுத்து தேர்வு இன்றி நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். ஓராண்டுக்கு பிறகு அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கட்டாயமாக 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கணவரை இழந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கான வயது வரம்பு 40 ஆகும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலிப்பணியிடங்களை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் நிரப்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilnadu anganwadi recruitment 2025