சமீப நாட்களாக தொடர்ச்சியாக கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 36945 Murders in 21 Years
நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன், சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் கொலை, மதுரையில் ரவுடி காளீஸ்வரன் கொலை என அடுத்தடுத்து கொலைகள் நடந்தன. சென்னையில் நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. 36945 Murders in 21 Years
இந்த நிகழ்வுகள் தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் குரல் எழுப்பினர்.
குற்றங்கள் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? 36945 Murders in 21 Years

இந்தநிலையில் 2003 முதல் 2024 வரையில் கடந்த 21 வருடங்களில் நடந்த கொலை, ஆதாய கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? என்பதை புள்ளி விவரங்களோடு இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்.
2003 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் கொலை, ஆதாய கொலை என 4,510 கொலைகள் நடந்துள்ளன. இதில், 2003ல் 1487 கொலைகளும், 104 ஆதாய கொலைகளும், 2004ல் 1406 கொலைகளும், 73 ஆதாய கொலைகளும், 2005ல் 1366 கொலைகளும், 74 ஆதாய கொலைகளும் நடந்துள்ளன. 36945 Murders in 21 Years
2007 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் 8,913 கொலைகள் நடந்துள்ளன.
2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் 9,026 கொலைகள் நடந்துள்ளன.
2017 முதல் 2021 வரைலான காலக்கட்டத்தில் 8,221 கொலைகள் நடந்துள்ளன.
2022 முதல் 2024 வரைலான மூன்று ஆண்டுகளில் 4,911 கொலைகள் நடந்துள்ளன.
மாநில குற்றப் பதிவுகள் பணியகம் தரவுகள் படி, 2003 முதல் 2024 வரை கடந்த 21 வருடங்களில் 34,771 கொலைகள், 2,174 ஆதாய கொலைகள் என மொத்தம் 36,945 கொலைகள் நடந்துள்ளன.
அந்தவகையில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த 4 ஆண்டுகளில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன என இந்த தரவு கூறுகிறது.
2021ல் 1597 கொலைகள், 89 ஆதாய கொலைகள் என 1686 கொலைகளும்,
2022ல் 1597 கொலைகள், 93 ஆதாய கொலைகள் என 1690 கொலைகளும்,
2023ல் 1598 கொலைகள், 83 ஆதாய கொலைகள் என 1681 கொலைகளும்,
2024ல் 1469 கொலைகள், 71 ஆதாய கொலைகள் என மொத்தம் 1540 கொலைகள் நடந்துள்ளன.

இந்தசூழலில் மேலும் கொலை குற்றங்களை குறைக்க டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இருவரும் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு வெளியில் எந்தவித தொடர்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பது, ரவுடிகளின் குற்ற வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்களை கண்காணிப்பது, சிறையில் இருந்து வெளியே செல்லும் ரவுடிகளின் நடத்தைகளை கண்காணித்து அவர்களது ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்துள்ளனர். 36945 Murders in 21 Years
இதுதவிர மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கு மேல் இரவு வரை அலுவலகத்திலோ வீட்டிலோ இருக்க கூடாது. அவரவர் பகுதியில் தொடர்ந்து ரவுண்ட்ஸில் இருக்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளனர்.
