திமுக எம்.பி-க்களை இதை செய்ய சொல்லுங்க… தமிழிசை வலியுறுத்தல்!

Published On:

| By Selvam

“திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள். பின்பு மற்ற மாநில முதல்வர்களை சந்திக்கலாம்” என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ஸ்டாலினை இன்று (மார்ச் 10) வலியுறுத்தியுள்ளார். Tamilisai urge stalin constituencies

இதுதொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்களின் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும் அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள். ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை.

திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள்.

முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள். பின்பு மற்ற மாநில முதல்வர்களை சந்திக்கலாம். முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்கள். பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்.

தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க, இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.

தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன பின்பும், அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது” என்று தெரிவித்துள்ளார். Tamilisai urge stalin constituencies

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share