“தவெக தலைவர் விஜய் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இன்றைக்கு அனைவரும் ஒன்று சேர வேண்டிய சூழல் வந்துள்ளது” என்று முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று (மே 18) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஊட்டிக்கு சென்று விடுகிறார். நேற்று நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழாவில் அனைவரும் ஆணவத்துடன் பேசுகிறார்கள். ஒரு கல்வி அமைச்சரே புத்தகத்தை வெளியிட்டது மிகவும் தவறு. tamilisai soundararajan invites vijay
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நாங்கள் போராடுவோம் என்று முதல்வர் சொல்கிறார். 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்திருந்தனர். ஏன் அப்போது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவில்லை? புதிய கல்வி கொள்கையை நிச்சயமாக தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்” என்றார். tamilisai soundararajan invites vijay
கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் அறிவித்திருப்பது குறித்து பேசிய தமிழிசை, “தவெக தலைவர் தம்பி விஜய் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இன்றைக்கு எல்லோரும் ஒன்று சேரவேண்டிய சூழல் வந்துள்ளது.
கூட்டணி தொடர்பாக பாஜக அகில இந்திய தலைமை முடிவு செய்வார்கள். ஆனால், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அந்த கொள்கையுடைய அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்று தெரிவித்தார். tamilisai soundararajan invites vijay