தமிழிசை ராஜினாமா ஏற்பு: தெலங்கானா புதுச்சேரிக்கு புதிய ஆளுநர் யார்?

Published On:

| By Kavi

Tamilisai Resignation Accepted

தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தொடர் தமிழ்நாட்டுப் பயணம், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணி குறித்த அறிவிப்புகள் என தமிழ்நாடு தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தீவிர மக்கள் பணியில் இறங்குவதாக அறிவித்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.  “மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு எனது வருங்கால திட்டத்தைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார் தமிழிசை.

இந்நிலையில் தமிழிசையின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக கனிமொழியை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் தமிழிசை. இந்த முறை அதே தொகுதியில் தமிழிசை போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!

கிச்சன் கீர்த்தனா: மாகாளிக்கிழங்கு ஊறுகாய்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share