உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம் என்ற அறிவிப்பு திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதாக கூறி 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மே 25) காலை அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் இந்த நடவடிக்கை வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, தமிழ்வழி கல்வி நீக்கம் குறித்த அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்கிறது என அரசியல் கட்சிகள் விமர்சித்தன.
இந்தநிலையில் இந்த உத்தரவை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தமிழ் மொழி படிப்பு நிறுத்தப்படவில்லை. தமிழ்வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தது. 60 சீட் கொண்ட இடங்களில் 10க்கும் குறைவான மாணவர்களே இந்த படிப்பை படிக்கின்றனர். எனினும் இன்று அறிவிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெறுகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், ”வரும் கல்வியாண்டில் தமிழ்வழி பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை பொறுத்து அடுத்த ஆண்டு இந்த படிப்பை தொடருவதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை: நிர்மலா சீதாராமன்
Comments are closed.