கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் – கடலைப்பருப்பு தால்

தமிழகம்

கோடைக்கேற்ற சிறந்த காய்களில் ஒன்று சுரைக்காய். உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துகள் அதிகம். கோடையில் ஏற்படும் சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சுரைக்காயுடன் கடலைப்பருப்பு சேர்த்து சுரைக்காய் – கடலைப்பருப்பு தால் செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

சுரைக்காய் – 2 (சிறியதென்றால் 2, பெரியதென்றால் 1)
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பெங்களூரு தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கடலைப்பருப்பு – 200 கிராம்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

சுரைக்காய்களைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் இறுத்து சுரைக்காய்த் துண்டுகளுடன் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இரண்டு விசில் வரை வேகவிட்டு அணைக்கவும்.

அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, இரண்டில் இருந்து மூன்று நிமிடம் வரை வதக்கவும்.

இதில் தக்காளி, உப்பு சேர்த்து, மேலும் நன்கு வதக்கவும். இதில் வெந்த சுரைக்காய், கடலைப்பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

பீட்ரூட் குருமா

மேத்தி சன்னா பனீர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *