யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிராக தமிழக போலீசார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது.
இதனையடுத்து பாஜகவை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், கொரோனா வேகமாக பரவுவதற்கு தப்லிக் ஜமாத்தினர் தான் காரணம் என்பது போல தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவிட்டார்.
அவரது கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காதீர் மீரான் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாரிதாஸை, மேலபாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மாரிதாஸ் மீது சட்டப்பிரிவு 295 (மத உணர்வுகளை புண்படுத்துதல்), பிரிவு 505 (2) (இருபிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல்) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ்க்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக போலீசார் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
உத்தரவு தமிழக போலீசாருக்கு சாதகமாக வரும் பட்சத்தில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
இந்து மத சர்ச்சையும் பொன்னியின் செல்வன் வசூலும் : சின்ன பழுவேட்டைரையர் ட்வீட்!
எழுதுனவர் பேரை பாத்தேன். அப்போ இது உள்நோக்க செய்தி என்று புரிந்தது