யூடியூபர் இர்பான் கார் மோதி மூதாட்டி பலி!

Published On:

| By Jegadeesh

யூடியூபர் இர்பானின் கார் மோதி இன்று(மே26) மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகின்றார்.

பணி முடிந்த நிலையில் மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று மீண்டும் பொத்தேரி வீட்டிற்கு செல்ல மறைமலைநகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது ஆடம்பர சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து பத்மாவதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பத்மாவதி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதி வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த அசாருதீன் மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் அது யூடியூபர் இர்பானின் கார் என்பதும், இர்பானின் கார் ஓட்டுநர் அசாரூதின் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

யூடியூபர் இர்பானுக்கும் ஆசிபா என்பவருக்கும் மிக பிரமாண்டமான முறையில் சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“ஆருத்ரா வழக்கில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்”: ஐஜி ஆசியம்மாள்

ஆட்சி மாற்றத்தின் அதிகாரமா செங்கோல்? திருவாவடுதுறை ஆதினம் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment