பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்தார். இதனையடுத்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவர் தனது யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார்.
தன் குழந்தையின் பாலினத்தைப் பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. தனது செயலுக்காக இர்பான் மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில், தனக்கு குழந்தை பிறந்த போது குழந்தையின் தொப்புள்கொடியை இர்பான் கத்தரியால் வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதை பார்த்து அங்கேயிருந்த மருத்துவர்களும் பார்த்து ரசிக்கின்றனர் .
இதற்கிடையே, மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலையை இர்பான் செய்திருப்பது கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் பலரும் இர்பானை கண்டித்து வருகின்றனர். தொடர்ந்து, இப்படி சர்ச்சையில் ஈடுபட்டு வரும் இர்பானுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல்பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி. இந்த தொப்புள் கொடியில் மூன்று இரத்த குழாய்கள் இருக்கும். அதில் 2 தமனிகளும், 1 சிரைகளும் ஆகும். இந்த தொப்புள் கொடி குழந்தை பிறந்த பின்னர் வெட்டப்படும். பின்னர், குழந்தையை குளிப்பாட்டிய பிறகு குழந்தையை தாயிடத்தில் கொடுப்பது வழக்கமானது. ஆனால், இந்த பணியை டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே செய்வார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்!
”எங்ககிட்ட கொள்ளையடிச்சதை திரும்ப கொடு” : மன்னர் சார்லஸை மிரள வைத்த ஆஸ்திரேலிய எம்.பி