சென்னையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று (நவம்பர் 30) புயல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ பார்ப்பவர்களின் மனதை பதற வைக்கிறது.
அதில்,ஒரு ஏடிஎம் வாசலில் வெள்ள நீர் தேங்கி நிற்க, அதில் ஒரு இளைஞர் இறந்து மிதந்து கிடக்கிறார்.
அந்த இளைஞர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாந்தன் என்பது தெரியவந்துள்ளது. ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக வந்த அவர் அங்கிருந்த இரும்பு கம்பியை பிடித்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் முத்தியால்பேட்டையில் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? : அன்பில் மகேஷ் பதில்!
அம்மா உணவகங்களில் இலவச உணவு: ரிப்பன் மாளிகையில் உதயநிதி ஆய்வு!