திருவாரூரில் பாதாள சாக்கடையில் மூழ்கிய இளைஞரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் சாக்கடையில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வட போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியார் வண்டி மூலம் கழிவுநீர் பாதாள சாக்கடை குழிக்குள் வெளியேற்றப்பட்டது. அப்போது தனியார் கழிவுநீர் வாகனத்தின் ஓட்டுநர் மணிமாறன் (30) மேன்ஹோல் பகுதியில் வழுக்கி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்து மூழ்கினார்.
இதையடுத்து, அவரை மீட்பதற்காக வாருகுச்சி தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அருணாச்சலம் (27) முயன்றபோது அவரும் தவறி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். மீட்கப்பட்ட இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கே இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரது உடலும் உடல்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லும்போது உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து மாவட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரது உடலும் உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உயரமாக இருப்பவர்களே… உங்களுக்கான ரெடிமேட் சுடிதார் சாய்ஸ் இதோ!
டாப் 10 செய்திகள் : தீபாவளி சிறப்பு பேருந்துகள் முதல் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரை!
கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்!