தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியால் கிரிக்கெட் வீரர் சாமுவேல் ராஜ் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையின் மிக முக்கியமான எப்போதும் பரபரப்பாக காணப்படும் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இன்று காலை 10.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போலீசார் இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர் விருகம்பாகத்தைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்துள்ளது.
இவர் ஒரு கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார். தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக சாமுவேல் ராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியால் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
பெண் காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!