“என் பையன் எனக்கு வேணும்”- தன்னிலை மறந்து கதறிய தாய்!
சென்னை பட்டினம்பாக்கத்திலுள்ள சீனிவாசபுரத்தில் நேற்று இரவு சையது குலாப் என்ற 23 வயது இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3-வது மாடியின் ஜன்னல் மேற்கூரை இடிந்து அவர் மீது விழுந்துள்ளது.
இது நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு சொந்தமானது. இந்த ஜன்னல் மேற்கூரை விழுந்ததில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து,அந்த இளைஞரின் உறவினர்கள் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மகனை பறிகொடுத்த தாய் கதறியபடி கூறியதாவது, ‘என் பையன் யாருக்கும் எந்த தீங்கும் பண்ணல. எல்லார்கிட்டையும் நல்ல பேரு வாங்கியிருந்தான். எனக்கு உடம்பு முடியாம போனா, என்ன அப்படி பார்த்துக்குவான். 2 பசங்களுக்கும் கல்யாணம் வச்சுருந்தேன். இரண்டாவது பையனுக்கு முதல்ல கல்யாணம் முடிச்சுட்டு, மூத்தவனுக்கு அடுத்து கல்யாணம் பண்ண முடிவு செஞ்சிருந்தேன். என் பையனுக்கும் எதுவும் ஆகிடாது. என்பசங்கதான் எனக்கு உயிரு. கல்யாணத்தை முடிச்சுட்டு வீட்டை மாற்றி போயிடனும்னு இருந்தேன். அதுக்குள்ள அந்த ஸ்லாப் விழுந்து என் பையன் என்னை விட்டு போயிட்டான். என் பையன் எனக்கு வேண்டும் . என் பையனை கூட்டிட்டு வர சொல்லுங்க என் பையன் எனக்கு வேணும் ‘ என்று தன்னிலை மறந்து கதறியது காண்போரை கண் கலங்க வைத்தது.
இதற்கிடையே, உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் த.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற தீர்மானம் : ஐ.நா சபையில் இந்தியா எடுத்த முடிவு!
இளம் மேயர் முதல் முதல்வர் வரை : யார் இந்த தேவேந்திர ஃபட்னாவீஸ்?