தொழில்முனைவோர்களுக்கு ஐந்து நாட்கள் – தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று (ஜூலை 3) தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” என்ற தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பயிற்சியை ஜூலை 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை (5 நாட்கள்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் தொழில் முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் மற்றும் அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் -ERP Tally, ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள், ஆகியவை விளக்கப்படும்.
இந்த பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆண், பெண் என இருபாலரும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சமாக 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதி செய்து தரப்படும். தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியிலும், 7010143022 / 8668102600 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டிக்கு வர வேண்டாம்! ஸ்டாலினை தடுத்த அமைச்சர்கள்… ஏன்?
2025 சாம்பியன்ஸ் ட்ரோபி : இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?