தமிழ் இலக்கிய வாசகர் வட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். இவர் எழுதும் காதல் கவிதைகளுக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். பல கல்லூரி மாணவர்களின் ஆதர்ச கவிஞராக மனுஷ்யபுத்திரன் அறியப்படுகிறார். இவர் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவராகவும் இருக்கிறார்.
இந்தநிலையில், மதுரையில் இருந்து இண்டிகோ விமானத்தில் இன்று (செப்டம்பர் 10) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, தனக்கு நேர்ந்த துயரமான ஒரு சம்பவத்தை மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மனுஷ்யபுத்திரன் எழுதிய பதிவு இதோ…
“கீழே விழுந்தேன்.
மதுரையிலிருந்து இன்று காலை 11.55-க்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் சென்னை வந்தடைந்தேன். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எல்லாம் இறங்கி 15 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.
அப்புறம்தான் இறங்க வீல் சேர் விமானத்திற்குள் வந்தது. இத்தனைக்கும் மதுரை ஏர்போர்ட்டிலேயே தகவல் தெரிவித்திருப்பார்கள். என்னோடு சேர்த்து மொத்தம் மூன்று பேர் சக்கர நாற்காலி உபயோகிப்பவர்கள்.
இருவர் மிகவும் வயதானவர்கள். அரைமணி நேரத்திற்குப் பிறகு இண்டிகோ பஸ் தனியாக எங்கள் மூவரை மட்டும் ஏற்றிக்கொண்டு ரன்வேயிலிலிருந்து விமான நிலையம் நோக்கி வந்தது.
பஸ் ட்ரைவர் அதிவேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார். ஒரு டர்னிங்கில் வேகமாக வண்டியை திருப்பினார். மூன்று வீல் சேரும் அப்படியே ஒரு புறமாக சரிந்தன. மற்ற இருவரும் எப்படியோ சமாளித்துக்கொண்டார்கள். நான் சரிந்து பேருந்தின் உட்புறமாக கீழே விழுந்தேன். தலை கம்பியில் மோத ஒரு இஞ்ச்தான் இடைவெளி. ஏர்போர்ட் அதிகாரிகளிடம் புகார் செய்துவிட்டு வெளியே வந்தேன்.
அலட்சியம்…பொறுப்பின்மை” என்று பதிவிட்டுள்ளார்.
மனுஷ்யபுத்திரன் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பயணித்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஃபேஸ்புக்கில் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசிக எங்களுக்கு எதிரியல்ல: ஜெயக்குமார் பேட்டி!
ராயன் பட நடிகர்தான் நடிகர் விஜய் மகனின் முதல் ஹீரோ?
விமான நிலைய நிரந்தர, தற்காலிக ஊழியர்கள் அனைவருமே வெகு அலட்சியமாகதான் “பணி” செய்கிறார்கள்