Write it down clearly order for doctors
இந்தியாவில் எந்த மருத்துவரிடம் சென்று மருந்துச்சீட்டு எழுதி வாங்கினாலும், அது சாதாரண மக்களுக்கு புரியாத புதிராகவே இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தான், ’மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில் மாத்திரைகளின் பெயர்களை தெளிவாக பெரிய எழுத்துகளாக (CAPITAL ) எழுத வேண்டும்’ என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) கடந்த 2016 செப்டம்பர் 28 அன்று உத்தரவு பிறப்பத்தது.
ஆனால் பெரும்பாலான டாக்டர்கள் இன்றுவரை அதனை பின்பற்றுவதில்லை.
உத்தரப்பிரதேசத்தில் கிறுக்கலான கையெழுத்துடன் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்குத் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2018ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மருத்துவர்களின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவர்கள் தரும் மருந்துச் சீட்டின் கிறுக்கல்களைப் பார்க்கும்போது ’கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து சரியாக இருக்காது’ என்ற நம் மூத்தோரின் வாக்கு உண்மை தானோ என நினைக்கத் தோன்றும்.
பெரும்பாலான மருத்துவர்கள் நிறைய நோயாளிகளை பார்க்கவேண்டும் என்ற அவசரத்திலும், ’நாம எழுதுற கையெழுத்து பார்மசிஸ்ட்டுக்குத் தெரியும் அதனால், எதற்கு கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும்’ என்ற எண்ணத்திலும் மருந்துச்சீட்டுகளை எழுதி நோயாளிகளுக்கு அளிக்கிறார்கள்.
இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகார்களும், மீம்களும் பறந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது “நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில்,
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என அனைத்து மருத்துவர்களும் இனி மருந்து சீட்டுகளில் CAPTAL லெட்டரில் தெளிவாக எழுத வேண்டும்” என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.700 கோடி கல் குவாரி ஊழல் : அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு!
இனி ஐபோனிலும் ’சென்னை பஸ்’ செயலி பயன்படுத்தலாம்!
எலக்ஷன் ஃபிளாஷ் : செல்வப்பெருந்தகையை வாழ்த்திய தமாகா புள்ளிகள்- காங்கிரசோடு இணைகிறதா தமாகா?
Write it down clearly order for doctors